வீடு அமைந்திருந்த லொக்கேஷன் எங்களையும் அப்படித்தான் கேட்கவைத்தது :) மலைமேலே வீடு, பால்கனி அதையொட்டி காய்கள்,பூக்கள் மற்றும் எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாக காய்த்துக்குலுங்கிய திராட்சை கொடிகள் நிறைந்த தோட்டம் என்றிருந்தால் யாராகயிருந்தாலும் மனதில் தோன்றக்கூடிய கேள்வி தானே :)
ஓகே, அதனால் என்ன அடுத்த தடவை எடுத்துக்கொள்ளலாம் என்று மனதை சமாதனப்படுத்திக்கொண்டு, அன்று பார்ப்பதற்க்கென்று விபூ செலக்ட் செய்துவைத்திருந்த Kap Kamenjak பார்ப்பதற்கு கிளம்பினோம்.
கேப் முனை Istria தீபகற்பத்தின் தென்முனையில் உள்ளது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை பூங்காவாக உள்ளது. குரோவேஷியாவில் பதினோரு அதிகாரப்பூர்வ இயற்கை பூங்கா மற்றும் எட்டு தேசிய பூங்காக்கள் உள்ளன.
கிட்டத்தட்ட 10 கி.மீ. நீளமும் 1/1.5 கிமீ பரந்த இந்த இயற்கை பூங்கா Premantura என்ற தீபகற்பத்தின் முனையில் அமைந்துள்ளது. இப்பூங்கா 30 கிமீ நீள கடலோரங்களையும், 20-க்கும் மேற்பட்ட விரிகுடாக்களையும் கொண்டுள்ளது. நாங்களும் 35-கூனாக்கு நுழைவுசீட்டு(1Euro=7,5Kuna) வாங்கிக்கொண்டு உள்ளே சென்றுநடக்கலாம் என்றால் பெரிய அதிர்ச்சி!!!
வழிமுழுவதும் ஒரே தூசி,புழுதிமணல்... இரண்டுபக்கங்களில் உள்ள மரங்கள்,செடிகள் எல்லாம் வெள்ளைபுழுதி உடைஉடுத்தி எங்களைப்பார்த்து சிரித்தது :(
நிறைய கார்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எங்களை கடந்து சென்றன. ம்கூம்... சரி நாமும் போய்ப்பார்ப்போம் என்று கிளம்பி கொஞ்சதூரத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். உச்சிவெயில் மண்டையை பிளந்து பாலைவனத்தை நினைவூட்டியது. கொஞ்சதூரம் நடந்தபின் தண்ணீர் தெரிய ஆரம்பித்தவுடன் தான் அனைவருக்கும் சிரிப்பு வந்தது ;)
இருந்த ஒரே ஒரு மரநிழலில் ஒடிப்போய் இடம்பிடித்து சிறிதுநேரம் ஓய்வெடுத்தோம்.
கீழேயிறங்கும் வரை அம்மாவின் புலம்பலையும்,டென்ஷனையும் பார்த்து எனக்கு ஓரே சந்தோஷம்.... உலகில் எல்லா அம்மாக்களும் ஒன்று என்றுதான் :) ஆனால் அவன் கீழேயிறங்கும்வரை எனக்கும் டென்ஷன். ஒருவழியாக பெரிய ஆக்ஷன் ஷோ பார்த்துமுடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்:)
கால்கள் போதும்போதுமென்று கெஞ்சும்வரை நடந்தோம். எங்கள் கால்களைப்போலவே சூரியனும் இன்று போதும் நாளை வருகிறேன் என்று மெதுவாக மறையத்தொடங்கியது ;)
மிகவும் களைப்பாக இருந்தாலும் போகும் வழியில் புலா(Pula) என்ற ஊரில் உள்ள பழமையான அம்ஃபி தியேட்டரையும் பார்க்கலாம் என்ற முடிவுடன் வண்டியை கிளப்பினோம்.
முழுநிலவும் எங்களை வழியனுப்ப வந்தது ;) போகும் வழியெல்லாம் சூரிய அஸ்தமனத்தையும், முழுநிலவின் அழகையும் பார்த்து களைப்பெல்லாம் மறந்து அம்ஃபி தியேட்டரை அடைந்தபோது இரவு 09மணிக்குமேல் ஆகிவிட்டது. தியேட்டரை சுற்றி 3-4 தெருக்கள் கடந்தும் பார்க்கிங் கிடைக்கவில்லை, சரி வந்ததற்கு போட்டோவாவது எடுத்துக்கொள்ளலாம் என்று சத்யாவை துணைக்கு கூட்டிக்கொண்டு கிளம்பினேன் :)
பயணம் விரைவில் தொடரும்............
No comments:
Post a Comment