Sunday, October 28, 2012

கோடைவிடுமுறை நார்வே: Oanes to Omastrand- 20.08.12


எப்போதும்போல் மூட்டைமுடிச்சுக்களை கட்டிக்கொண்டு அடுத்த இலக்கான ஒமாஸ்ராண்ட் நோக்கி புறப்பட்டோம். சூரியனும் காலையிலேயே நான் இருக்கிறேன் என்று உற்சாகமூட்டியது.
போகும்வழியில் லேண்டா என்ற(prehistoric village)கிராமத்தையும் பார்த்து செல்ல முடிவுசெய்தோம்.

நார்வே வரலாற்றில் லேண்டா ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தனிப்பட்ட அத்தியாயம். நம் முன்னோர்கள் சுமார் (1500 கி.மு. கி.பி. 600), 2000 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கே வாழ்ந்து வந்துள்ளார்கள். 
புனரமைப்பு பணிகளில்  3000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அந்த சூழ்நிலை ஒன்று உருவாக்க முயற்சியெடுத்து, 1995-ல் பார்வைக்கு வைக்கப்பட்டது.

குழந்தைகளும், பெரியவர்களும் அணிந்து மகிழும்படி அந்தக்கால உடைகளும், மற்றும் அவர்கள் கருவிகளாக உபயோகப்படுத்திய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விபூ, சத்யா இருவரும் ஆர்வமாக ரசித்தார்கள்.
ைப்பார்த்ு முடித்ு விட்டு, ஒமாஸ்ராண்ட்-ஐ நோக்கி பயணித்தோம்.
வழிமுழுவதும் மலை, அருவி, ஏரி என்று இயற்கை அழகுடன் காட்சியளித்தது பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. பத்து நிமிடத்திற்கு ுறாரைநிறத்ி  ோட்டோ எடத்ாலும் இடத்ைவிட்டு நர்வற்கு மே வில்லை :(
 ஆங்காங்கே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச்செல்வதற்கு இடையே மலைகள் தடையாக இருந்ததால், மலையைக்குடைந்து பாதை அமைத்திருந்தது, மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் :)


















ஒருவழியாக மாலை ஆறேமுக்கால் மணிக்கு ஒமாஸ்ராண்டாவில் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். நான்கே நான்கு வீடுகள், அதைச்சுற்றி மலை, ஏரி என்று ஏரியா (location) சூப்பராக இருந்தது.

 இண்டெர்நெட்டில் அந்த வீட்டைப்பார்த்தே வியந்துபோயிருந்த எங்களுக்கு நேரில் பார்த்தபோது அசந்து போய்விட்டோம் :)

அன்று முழுவதும் பார்த்து அசந்த இடங்களும், சுற்றி இருந்த சூழ்நிலை எல்லாம் எங்களை வியக்க வைத்தது :) அந்த களைப்பில் தூங்கச்சென்றோம்.

                                                                    காத்திருங்கள் பயணம் தொடரும்.......




Saturday, October 20, 2012

இஞ்சியின் அருமை, பெருமைகள்....

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை, 
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை
என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.

இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது


இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது.

ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது;

கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
 மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.

உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். 

 இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.

பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்' செயற்பாடு குன்றி, ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும், இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.



இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.


 இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

இஞ்சி சாப்பிடுவோம், இன்புற்று வாழ்வோம் :)

                                                                        வாழ்க வளமுடன்.....


Tuesday, October 9, 2012

கோடைவிடுமுறை நார்வே: The Pulpit Rock -19.08.12

அடுத்தநாள் காலை எழுந்து ஏலக்காய், மிளகு போட்டு சூப்பரான மாசலா டீ  எடுத்துக்கொண்டு வெளியே பால்கனி வந்து பார்த்தால், மேகம் நானும் இருக்கிறேனென்று காண்பிப்பது போல மலையை நன்றாக சூழ்ந்திருந்தது :)
 ஏற்கனவே இண்டெர்நெட்டில் பனிமூட்டமாகயிருந்தால், மலை ஏறி பிராயோசனம் ஒன்றுமில்லை என்று படித்திருந்தோம், அதனால் அன்று ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான் என்று முடிவுசெய்தோம். வானிலை அறிக்கையும் அன்று முழுவதும் மழை என்று அறிவித்தது.
 என் கணவர் போட்டுக்கொடுத்த பிரெட் ஆம்லட்டை நன்றாக சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே பொழுதைப்போக்கினோம். மாலையில் கிளம்பி காரில் ஒரு ரவுண்ட் ஊரைச்சுற்றிவிட்டு, மார்கெட்டுக்குப்போய் சாலமன் மீன் வாங்கிவந்து, ஃப்ஷ் ஃப்ரை, ஃப்ஷ் சில்லி பிரியாணி என்று சமைத்து, நன்றாக சாப்பிட்டுக்கொண்டே டிவியில் நார்வே சானல் போட்டுப்பார்த்தால் அங்கே நம்ம சூர்யாவை பேட்டிஎடுத்துக்கொண்டிருந்தார்கள். அட, நம் தமிழன் பெருமை எங்கும் ஒலிக்கிறதே என்று எண்ணி வியந்து, மாற்றான் தமிழ் படபாட்டு சூட்டிங் எடுத்துக்கொண்டிருந்ததையும் ரசித்தோம்.
அடுத்தநாள் காலை புல்பிட் ராக்(Pulpit Rock) ஹைக்கிங் போவதற்கு கிளம்பினோம்.
இது மிகவும் செங்குத்தான மலை. பாதை கடல் மட்டத்திலிருந்து சுமார் 270 மீட்டர் (886 அடி) உயரத்தில் ஃப்ரைகெஸ்ட்டொல்க்ய்ட்ட (Preikestolhytta) -வில் தொடங்கி 604 மீட்டர்(1982 அடி) உயரத்தில் உள்ளது.

நாங்கள் தங்கியிருந்த ஃப்போர்சாண்ட் ஊரிலிருந்து 40 நிமிடதூரத்தில் இருந்தாலும் மூன்று சுரங்கப்பாதைகளை Notvik, Høllesli-, Botsheitunnelen கடந்து செல்ல வேண்டியிருந்தது. நார்வேயில் எண்ணிலடங்கா மலைகளைக்குடைந்து சுரங்கப்பாதைகள் அமைத்திருந்தாலும், எல்லாமே நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது, பாராட்டத்தக்கது :) 

ஐய்யப்பன் கோவிலுக்கு போய் வந்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன், இங்கு நேரில் அப்படிப்பட்ட பாதையை பார்த்தேன், வியந்தேன் & பயந்தேன் !!! முதல்படியைக்கடந்ததுமே, இதுவே இப்படியிருந்தால் இன்னும் போகப்போக எப்படியிருக்குமோ என்று அரைமணிநேரத்திலேயே எண்ணம் தோன்றியது.





சரி, கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை... சாமி சரணம், ஐய்யப்ப சரணம் !!!! என்றும், பழனி முருகனுக்கு அரோகரா..... போட்டுக்கொண்டும் (எல்லாம் மனதுக்குள் தான் :) ) அந்த கரடுமுரடான காட்டுப்பாதையில் ஏறினோம். ஏறினோம், ஏறினோம் ஏறிக்கொண்டே இருந்தோம்..... மலைப்பாதையும் ஏறி ஏறி போய்க்கொண்டே இருந்தது.....






 நாங்கள் அரோகரா போட்டது நிஜமாகவே சாமி காதில் விழுந்தது போல,  திடீரென்று கரடுமுரடான  மலைப்பாதையில் ஒரு சமவெளி,  ஒரு ஒற்றையடிப்பாதை, உடனே எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் !!!! இனிமேல் இப்படித்தான் போகும் போலவென்று, ஆனால் அடுத்த 10 நிமிடத்திலேயே, என் கற்பனைக்கு முற்றுப்புள்ளி  வைத்தது, திரும்பவும் வந்த  பழைய கரடுமுரடான மலைப்பதை :(



இதற்குள் விபூவும், சத்யாவும் நாங்கள் முன்னால் போகிறோம், நீங்கள் மெதுவாக வாருங்கள் என்று முன்னால் கிளம்பிவிட்டார்கள்.

கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைத்தால், விபூவையும், சத்யாவையும் கண்ணிலேயே தெரியவில்லை :(
மலை ஏறித்திரும்பி வருபவர்களிடம் இன்னும் எவ்வளவு தூரமிருக்கிறது என்று கேட்டால், 2 மணிநேரமாகும் என்றார்கள். ஏற்கனவே நாங்கள் கிளம்பி 2 மணிநேரமாகிவிட்டது, இன்னும் அவ்வளவு தூரம்போகவேண்டுமா? நினைத்தபோதே ஏற்கனவே பயத்தில் ஏறியிருந்த பிபி இன்னும் ஏறியது.

சாப்பாடு, குடிப்பதற்கு தண்ணீர் என்று எல்லாம் வைத்திருந்த பேக் விபூ, சத்யாவிடமிருந்தது. பெர்முடாவில் அவசரத்திற்கு வைத்திருந்த இரண்டு குளுக்கோஸ் மாத்திரைகளும் காலி :(

ம்ம்ம்.. வேறுவழியில்லை, நடக்க வேண்டியதுதான்.
இங்கிருப்பார்கள், ஒகே இன்னும் கொஞ்சதூரத்தில் வெயிட் பண்ணிக்கொண்டிருப்பார்கள் என்று ஒருவழியாக ஒருமணி நேர மலைஏற்றத்திற்குப்பிறகு எங்கள் பொக்கிஷங்களை கண்டுபிடித்தோம் :)  அவர்களைப்பார்த்த பிறகுதான் எனக்கும், என் கணவருக்கும் நிம்மதி வந்தது.
எல்லோரும் கொஞ்சம் ஜுஸ், தண்ணீர் என்று குடித்துவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறுவதைவிட இறங்குவது ஈஸிதானே, அத்துடன் ஏறி வந்த பாதைதானே, அதனால் சீக்கிரம் இறங்கிய மாதிரி ஒரு எண்ணம். 
மதியம் சுமார் 12:45 மணிக்கு கிளம்பி, திரும்பி வரும்போது இரவு 07:30 ஆகிவிட்டது. கார்பார்க்கிங் வந்தபிறகுதான் பசியே வந்தது ;) ஐஸ் மற்றும் கொறிப்பதற்கு கொண்டுசென்றிருந்த முறுக்கு, சாக்லெட் என்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.
மலையேறிய அனுபவம் ரொம்ப புதுமையாக இருந்தது. இண்டெர்நெட்டில் படித்ததைவிட, ஜெர்மனி, சூவிஸ், ஆஸ்ட்ரியா, இட்டாலி என ஐரோப்பாவில் பார்த்த மலைகளைவிட இங்கு ரொம்ப, ரொம்ப வித்தியசமாகவும், கஷ்டமாகவும் இருந்தது :( ஆனாலும் எங்கள் நால்வருக்குமே ரொம்பபபப....... பிடித்திருந்தது ;)
வீட்டிற்குவந்து ரெடிமேட் கேசரி, வெஜிடபுள் புலாவ் என அவசர 5 நிமிட குக்கிங் முடித்து, (வாழ்க MTR ready to cook food items ;))மதியம் சாப்பிடாதற்கும் சேர்த்து ஒரு வெட்டு வெட்டி விட்டு, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பவேண்டுமே, அதனால் பொட்டிபடுக்கைகளையெல்லாம் பேக் செய்துவிட்டு, அப்போதுதானே காலையில் நிறைய நேரம் தூங்கலாம் ;) எப்படி எங்கள் ஐடியா, குறிப்பாக நானும், விபூவும் காலையில் எழுந்திருப்பதில் சோம்பேறிகள் !!! அதனால் தான் இந்த இரவுநேர பேக்-அப். அதன்பின் எப்போதும்போல் அன்று எடுத்த போட்டோக்களையும் பார்த்துவிட்டு, இரவு 11.38 க்கு களைப்பில் தூங்கச்சென்றோம்.


அடுத்தநாள் எங்கள் பயணம் ஃப்போர்சண்ட்-லிருந்து (Forsand) ஒமாஸ்ராண்டா (Omastranda) நோக்கி கிளம்பியது. போகும் வழியில் நம் முன்னோர்கள் சுமார் 1500 கி.மு. கி.பி. 600, 2000 ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்த லேண்டா எனும் கிராமத்தையும் பார்த்தோம்..........



                  
                விரைவில் பயணம் தொடரும்......