Friday, November 23, 2012

கோடைவிடுமுறை நார்வே: Glacier- 22.08.12

வழக்கம்போலவே சுமார் மதியம் 12 மணிக்கு ஒருவழியாக காரை (Buarbreen Glacier) ஃபூஎர்ஃப்ரீன் பனிகட்டி பாளம் மற்றும் இரட்டையர்கள் நீர்வீழ்ச்சி(Låtefoss Twins Waterfalls) பார்க்க கிளப்பினோம்.
 மீண்டும் ferry-ல் Fjord- ஐ கடந்துசெல்லவேண்டும். இதுதான் நார்வேயில் உள்ள மிகப்பெரிய குறை :( பயணத்திலேயே நம்முடைய நிறைய நேரம் வீணாகிவிடுகிறது. கப்பலுக்கு காத்திருந்து கரையைக்கடந்து அடுத்தபக்கம் வந்து வேகமாக செல்லலாம் என்றால், சான்ஸ்ஸே இல்லை :(


 போகும்பாதைகள் அவ்வளவு கொள்ளை அழகுடன் காட்சியளித்தது :)))

மலை, மலையை ஒட்டிய பாதை, அதையொட்டி நதி என்று இயற்கையழகு என் அழகைப்பார் என்றது.






எங்களாலும் அந்த அழைப்பை மறுக்கமுடியவில்லை :) நிமிடத்திற்கொரு முறை நிறுத்தி போட்டோ எடுத்துக் கொண்டோம்.

போகும்வழியில் இண்டர்நெட்டில் படித்தது போலவே ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகள் !!!



இங்கிருந்து நேராக இண்டியாவிற்கு pipeline connection போட்டால், நம்மூரில் தண்ணீர் கஷ்டம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணம்தான் தோன்றியது ;) idea superla :)

எங்குபார்த்தாலும் தண்ணீர், இந்தப்பக்கம் பார்த்தால் பச்சைப்போர்வை போர்த்திய  மலைகள், வெள்ளை ஆடை அணிந்த நீர்வீழ்ச்சிகள்... அந்தப்பக்கம் பார்த்தால் நீலச்சேலை கட்டிய நதி என்று காரில் போகும்போது எந்தப்பக்கம் பார்ப்பது என்றிருந்தது.





வேறுவழி, காரை ஓரங்கட்டினோம். சுற்றி, சுற்றி 360 டிகிரி சுற்றி போட்டோ எடுத்தபின் தான் கார் இடத்தைவிட்டு நகர்ந்தது :)

வரும்வழியெல்லாம் மழை
பெய்து கொண்டே இருந்ததால் அதுவரை நீர்வீழ்ச்சியில்கூட இறங்க மறுத்த விபூவும் இறங்கி viboos typical: panaroma photos எடுக்க ஆரம்பித்துவிட்டாள் :)


அங்கிருந்து கிளம்பி 10 நிமிடத்திலேயே தூரத்தில் Glacier பனிப்பாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

அதன்பின் பாதை மிகவும் குறுகலானது, ஒருநொடி பாதைமாறி வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. ஒருகார் மட்டுமே போகக்கூடிய மிகச்சிறிய பாதை.




அச்சோ, இதில் எதிர்த்தார்போல் கார் வந்தால் எப்படி வழிவிடுவது என்று நினைத்து முடிக்கும் முன்பே எதிரில் கார் வந்து நிற்கிறது :( எல்லாம் நம்ம நேரம் என்ன செய்வது, இந்தமாதிரி ஏதாவது குண்டக்க மண்டக்க என்று நினைத்தால் உடனே நடந்துவிடுகிறது :( பேசாமல் கண்ணைமூடிக்கொண்டேன், என் கணவர்தான் விடாக்கொண்டன் ஆச்சே, லாவகமாக எதிர் வண்டிக்கு இடம்விட்டு எங்கள் காரையும் எடுத்தார். இந்த ஒற்றையடிப்பாதையில் இன்னும் அரைமணிநேரம் எப்படிப்போகப் போகிறோம், எல்லா சாமிகளையும், எதிரில் கார் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன் :)



பார்க்கிங் ஏரியா வந்தவுடன், கஷ்டப்பட்டு கடந்துவந்த பாதையெல்லாம் மறந்துவிட்டது.

சரி, மலையடிவாரத்திலேயே நின்றால் எப்படி, ஏற்கனவே நின்று, நின்று வந்ததால் நேரமாகிவிட்டது.

நடக்க ஆரம்பித்தோம்.
மறக்காமல் எல்லோரையும்போல் நாங்களும் கல்லை அடுக்கிவிட்டு கிளம்பினோம்.



சிகப்பு குறியை தொடர ஆரம்பித்தோம். ஒருபக்கம் மலை, மறுபக்கம் பனி உறைந்து, சலசலவென்றில்லாமல் பெறுத்தசத்தத்துடன் ஆரவாரித்துச்சென்று கொண்டிருந்த காட்டாறு என்று பக்கபலத்துணையுடன் நடந்தோம். 
நாங்கள் போகிற ஸ்பீடைப்பார்த்தால் மலையேறுவதன் சாத்தியம் குறைவாக தோன்றியது, யோசித்துக்கொண்டிருக்கையில் ஜெர்மன்பேச்சு கேட்டது, ஒரு குடும்பம் இறங்கிவந்துகொண்டிருந்தார்கள். ஆகா ஆள் கிடைத்துவிட்டார்கள், அவர்களிடம் வழியைப்பற்றிக்கேட்டுவிடலாம் என்று, குடும்பத்தலைவர் அப்பாவிடம் சென்று, நான்:  "குட்டன் டாக்"(Guten Tag/Hallo/Hi) என்று ஜெர்மனில் கேட்க ஆரம்பித்தவுடன், பெரிய ஷாக் அவர் முகத்தில் ஒரு நிமிடம் அவர் பேசவேயில்லை, மறுபடியும் நான் கேட்டபின் என்னை அதிசயமாக பார்த்தார். அந்த அத்வானகாட்டில் இந்தியப்பெண் ஜெர்மன் பேசுவதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றார் :))))  மழையின் காரணமாக பாதை போகப்போக வழுக்கலாகவும், ஏறுவதற்கு சிரமமாகயிருந்ததால் பாதியிலேயே திரும்பிவிட்டதாக கூறினார் :(((
மதியம் 4 மணியாகிவிட்டது. ஓகே, இதற்குமேல் நாம்சென்று பயனில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கேற்ப ஏறினவரை போதும் என்று அங்கிருந்தே மலையையும், பனிப்பாறையையும் என்ஜாய் பண்ணினோம்.
 கீழிறங்கி வந்தால், அந்திசாயும் வேளையில் மஞ்சள்பூக்களின் அழகு சூரியஒளியில் மேலும்அழகுமெறுகேறி மின்னிக்கொண்டிருந்தது :))) எப்படி போட்டோ எடுக்காமல் இருக்கமுடியும், உடனே செயல்படுத்தினோம்.
ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான் :))))
 போதும்போதுமென ரசித்துவிட்டு, மலைக்கும், பனிப்பாறைகளுக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு, இரட்டையர்கள் நீர்வீழ்ச்சி பார்க்க கிளம்பினோம்.


நம்மூர் கொடைகானல் போலிருந்தது. பக்கத்திலேயே டீக்கடை, அந்த மழைக்கு இதமாக காஃபி, டீ குடித்துவிட்டு, அருவியையும் ரசித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.




ஏற்கனவே அப்பாவும், மகனும் வரும்போதே கப்பலில் பெல்ஜியத்திலிருந்து டூரிஸ்ட்டாக வந்திருந்த இளைஞரிடம் பேச்சுக்கொடுத்தபோது கிடைத்த தகவலின்படி, திரும்பிப்போகும்போது, வந்த வழியிலேயே செல்லாமல், (panaroma view) இயற்கை எழில்கொஞ்சும் ரூட்டில் செல்ல முடிவுசெய்திருந்தனர்.

ரூட்டை மாற்றியது வீணாகவில்லை, ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது.

நிறைவான மனதோடு, வீட்டை வந்தடைந்தோம் :))))
சாப்பிட்டுவிட்டு எப்போதும்போல் அடுத்தநாள் போவதற்கு ஃப்ளான் செய்துவிட்டு நாளைய பயணம் நீண்டதூரம் என்பதால் தூங்கச்சென்றோம்.

ஆனால் அந்தப்பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவை எங்களுக்கு ஏற்படுத்தப்போகிறது என்பது யாருக்குமே அப்போது தெரியவில்லை !!!!! ?????

                                    

                                               ஆவலுடன் காத்திருங்கள்,
                                                                       
                                                                         விரைவில் தொடரும்..... :)













Thursday, November 22, 2012

படித்ததில் பிடித்தது - நீல் ஆம்ஸ்ட்ராங் or பஸ் ஆல்ட்ரின்?

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Alden Armstrong) - பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin)
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்?


இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவோம். நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் ஆல்ட்ரின்/ பஸ் ஆல்ட்ரின்.
 
அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

 
 முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுவோம்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது.
நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.

 நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி :(

துணிந்து நில், தொடர்ந்து செல், வெற்றி நிச்சயம் நமக்கே :)))

Tuesday, November 20, 2012

கோடைவிடுமுறை நார்வே: Bergen- 21.08.12

நடுவில் இலையுதிர்கால விடுமுறையில் ஸ்லோவெனியா (Slovenia) நாட்டிற்குச்சென்று வந்ததால், நார்வே பயணக்கட்டுரையை தொடரமுடியவில்லை :(


இன்றைய பயணம் பேர்கன் நகரத்தை நோக்கி புறப்பட்டது. இது நாங்கள் தங்கியிருந்த நகரத்திலிருந்து ஒன்றரைமணி தூர பயணத்தில் இருந்தது.

பேர்கென் "மலைகளிடையேயான பசும்புல் நிலம் " என்ற அர்த்தத்தில் கி.பி. 1070 ஆம் ஆண்டு Olav kyrre (s /o Harrald Hardrade ) என்கிற மன்னரால் பெயரிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இது நார்வேயின் இரண்டாவது பெரிய நகரம். ஐரோப்பாவின் பெரிய துறைமுகங்களில் பேர்கென் துறைமுகமும் ஒன்று என்ற சிறப்பு மிக்க நகரம். இதை தாண்டி வராற்று சிறப்பு மிக்க நகரமும் கூட.

இரண்டாம் உலக போரின் போது, பேர்கென் ஜேர்மன் வசம் இருந்தது, அப்போது பல புராதான கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

டூரிஸ்ட் அலுவலகத்தில் போய், பேர்கன் பற்றிய தகவல் அடங்கிய புத்தகங்களை பெற்றுக்கொண்டு கிளம்பினோம். வயிறும் மதிய சாப்பாட்டை ஞாபகப்படுத்தியது. 


இரண்டடி தூரம் நடந்தவுடன் மீன் மார்கெட், பெரிய தொட்டியிலிருந்து நமக்கு விருப்பப்பட்ட மீனை செலக்ட் செய்யலாம்.
ஆனால் மீனின் வாசனையால் அங்கு நிற்ககூட முடியவில்லை, அப்புறம் எங்கே சாப்பிடுவது :(

அடுத்த கடையைப்பார்த்து நகர்ந்தோம், எங்கு சென்றாலும் மீன் வாடை விடவில்லை. ஒருவழியாக யாமிருக்க பயமேன் என்று சொல்லிய மெக்டொனால்ஸ்ஸை கண்டுபிடித்து சாப்பிட்டு முடித்தோம் ;)



வெளியில் வந்தால் ஒரே கூட்டம்கூட்டமாக கல்லூரி மாணவர்கள் கார்னிவெல் போல் வித்தியாசமாக உடையணிந்து ஊர்வலமாக சென்றார்கள்.
ஊர்வலத்தை பார்த்துவிட்டு பேர்கன் நகரத்தை, நம் ஊரில் நவக்கிரக்ஹத்தை, பிள்ளையாரை சுற்றுவதுபோல் சுற்றிச்சுற்றி வந்து சுற்றிப்பார்த்தோம்.

அதன்பின் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வெளியில் இருந்த  ஸ்டாவ் சர்ச் (Stave Church) பார்க்க கிளம்பினோம். 


ஃப்பென்டொப்ட் ஸ்டாவ் சர்ச் (Fantoft Stave Church) வரலாறு மிகவும் பழமையானது, 800 ஆண்டுகளுக்கு முந்ததையது. 

இத்தேவாலயம்
முதலில் சோகன்(Sogn) என்னும் கிராமத்தில்1150-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேவாலயத்தை இடப்பற்றாக்குறையால் இடிக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது இத்தேவாலயத்தை
ஃபிரெடெரிக் ஜோர்ஜ் என்பவர் வாங்கி,
1883 இல் (இப்போது) பேர்கன் அருகில் உள்ள Fantoft-க்கு சிறுசிறு பகுதிகளாக்கி நகற்றினார். பார்ப்பதற்க்கு மிக அழகாகவும், மிக்க கலைநயத்துடனும் காட்சியளித்தது. காலதாமதமாகிவிட்டதால் எங்களால் வெளித்தோற்றத்தைத்தான் காணமுடிந்தது :(


அங்கிருந்து கிளம்பி திறந்தவெளி பேர்கன் அருங்காட்சியகம் (Gamle Bergen) பார்க்க கிளம்பினோம்.

40 மரவீடுகளைக்கொண்ட இவ்வருங்காட்சியகம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளிலிருந்த பல்வேறு பழமையான வீடுகள் மற்றும் கடைகள், பேக்கரி மற்றும்  முடிதிருத்தும் நிலையம் என சிறிய நகர வாழ்க்கையின் ஒரு அரிய தோற்றமாக காட்சியளிக்கிறது.

 
பேர்கன் நகரானது ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. பெயருக்கெற்றார் போல் பகலில் நன்றாக சூரிய ஒளியுடன் இருந்த நகரம் மாலை 6 மணிக்குமேல் பனிமூட்டத்துடன் மழை வர ஆரம்பத்தது. 

நாங்களும் பேர்கன் நகரத்தை பார்த்த சந்தோசத்தில் வீட்டை நோக்கி Omastranda-விற்கு வண்டியை கிளப்பினோம் :)

அடுத்தநாள் போவதற்கு plan செய்திருந்த Glacier மற்றும் Twin waterfall பற்றிய விபரங்களைப்படித்துவிட்டு தூங்கச்சென்றோம்.


                                                    காத்திருங்கள், விரைவில் பயணம் தொடரும் :)