எப்போதும்போல் மூட்டைமுடிச்சுக்களை கட்டிக்கொண்டு அடுத்த இலக்கான ஒமாஸ்ராண்ட் நோக்கி புறப்பட்டோம். சூரியனும் காலையிலேயே நான் இருக்கிறேன் என்று உற்சாகமூட்டியது.
போகும்வழியில் லேண்டா என்ற(prehistoric village)கிராமத்தையும் பார்த்து செல்ல முடிவுசெய்தோம்.
நார்வே வரலாற்றில் லேண்டா ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் தனிப்பட்ட அத்தியாயம். நம் முன்னோர்கள் சுமார் (1500 கி.மு. கி.பி. 600), 2000 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கே வாழ்ந்து வந்துள்ளார்கள்.
புனரமைப்பு பணிகளில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அந்த சூழ்நிலை ஒன்று உருவாக்க முயற்சியெடுத்து, 1995-ல் பார்வைக்கு வைக்கப்பட்டது.
குழந்தைகளும், பெரியவர்களும் அணிந்து மகிழும்படி அந்தக்கால உடைகளும், மற்றும் அவர்கள் கருவிகளாக உபயோகப்படுத்திய பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விபூ, சத்யா இருவரும் ஆர்வமாக ரசித்தார்கள்.
அதைப்பார்த்து முடித்து விட்டு, ஒமாஸ்ராண்ட்-ஐ நோக்கி பயணித்தோம்.
வழிமுழுவதும் மலை, அருவி, ஏரி என்று இயற்கை அழகுடன் காட்சியளித்தது பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை காரைநிறுத்தி போட்டோ எடுத்தாலும் இடத்தைவிட்டு நகர்வதற்கு மனமே வரவில்லை :(

ஆங்காங்கே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச்செல்வதற்கு இடையே மலைகள் தடையாக இருந்ததால், மலையைக்குடைந்து பாதை அமைத்திருந்தது, மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயம் :)
ஒருவழியாக மாலை ஆறேமுக்கால் மணிக்கு ஒமாஸ்ராண்டாவில் நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். நான்கே நான்கு வீடுகள், அதைச்சுற்றி மலை, ஏரி என்று ஏரியா (location) சூப்பராக இருந்தது.
இண்டெர்நெட்டில் அந்த வீட்டைப்பார்த்தே வியந்துபோயிருந்த எங்களுக்கு நேரில் பார்த்தபோது அசந்து போய்விட்டோம் :)

அன்று முழுவதும் பார்த்து அசந்த இடங்களும், சுற்றி இருந்த சூழ்நிலை எல்லாம் எங்களை வியக்க வைத்தது :) அந்த களைப்பில் தூங்கச்சென்றோம்.
காத்திருங்கள் பயணம் தொடரும்.......
இடம் சூப்பராக இருக்கு, செல்வி :)
ReplyDelete