காலை எழுந்து எல்லோரும் ரெடியாகி, பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு அடுத்த ஊருக்கு செல்வதற்கு புறப்பட்டோம்.
அடுத்து நாங்கள் போகவேண்டிய ஊர் (Fjord) ஃப்போர்ட்-க்கு அடுத்த கரையில் இருந்ததால் கப்பலில் போவதற்கு முதலிலேயே புக் செய்திருந்தோம். ஃப்போர்ட் (Fjord)என்பது பனிப்பாறை உடைந்து இரண்டாக பிளந்து பாறைகளுக்கு நடுவில் உருவாகும் ஒரு நீண்ட குறுகிய நதி உள்வழி. நாங்கள் பயணிக்க உள்ளது லிசஃப்போர்ட்(Lyseford). ஒன்றரைமணிநேர கார்பயணத்திற்கு பிறகு இரண்டரைமணிநேர கப்பல் பயணம். So, இன்றையப்பொழுது பயணத்திலேயே முடிந்துவிடும். ஆனால் 2 பயணமும் சூப்பரோ சூப்பர், அதனால் நேரம் போனதே தெரியவில்லை.
நேற்று கியராக் போகும்போது நேரமில்லை என்று நிறுத்தவேயில்லை, அதனால் இன்று நேற்றே பார்த்து வைத்திருந்த இடங்களில் எல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டோம். லிசஃப்போர்ட் மலைகள் பார்ப்பதற்கு சற்று வித்யாசமாக ஆனால் அதேசமயத்தில் மிக அழகாகவும் இருந்தது.
பாறைகளின் மேலே அங்குள்ள சின்னச்சின்ன கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்தார்கள், அப்படி வைத்தால் திரும்பவும் அந்த இடத்திற்கு வருவோம் என்ற நம்பிக்கை அங்குள்ளது. விடுவோமா :) நாங்களும் எங்கள் பங்கிற்கு திரும்ப போவோம் என்ற நம்பிக்கையில் கற்களை அடுக்கி வைத்தோம்.
மதியம் 12 மணிக்கு கப்பல் எங்களை ஃப்போர்டின் கிழக்கு பகுதியிலுள்ள ஊரான (Lysebotn) லிசபோட்டனிலிருந்து மேற்கு பகுதியிலுள்ள (Forsand) ஃப்போர்சண்ட் ஊருக்கு கொண்டுவிடும். ஃப்பெரியில்(Ferry) ஏறுவதற்கு வண்டிகள் வரிசையாக நின்று காத்துக்கொண்டிருந்தன, நாங்களும் வரிசையில் கலந்துகொண்டோம். கப்பலில் சாப்பிடுவதற்கு கொண்டுவந்திருந்த லெமன் ரைஸ் பேக்கை டிக்கியிலிருந்து என் கணவர் முன்னால் எடுத்துவைத்துக்கொண்டிருந்தபோது, கண்டெக்டர் டிக்கெட், டிக்கெட் என்று வந்தார். அவசரமாக என் கணவரும் டிக்கியை பூட்டிவிட்டு வந்து டிக்கெட் வாங்குவதற்கும், முன்னால் உள்ள கார்கள் நகர்வதற்கும் சரியாக இருந்தது. நாங்களும் கிளம்பினோம், அப்போது காரில் ஏதோ கதவு திறந்துள்ளதை சிக்னல் பீப், பீப் செய்ததைக்கூட சரியாக கண்டுகொள்ளாமல், எல்லோருடைய கதவைமட்டும் திறந்து மூடி செக்செய்துவிட்டு, பேசிக்கொண்டே கிளம்பி 5 நிமிடதூரத்திலிருந்த கப்பலில் கடைசிக்காராக உள்ளே ஏறிவிட்டோம். கார்களெல்லாம் ஏறிய பின்,எங்களுக்கு பின்னால் மோட்டோர்பைக்குகளை ஏற்றினார்கள். நாங்களும் மெதுவாக இறங்கி கப்பலின் மேல்தளத்திற்கு போகலாம் என்று கார் ஒழுங்காக பார்க்செய்திருக்கிறோமா என்று பின்னால் பார்த்தால் !!!!!எங்கள் கார் டிக்கி சரியாக மூடாமல், பாதி லக்கேஸை காணவில்லை :( ஐயையோ என்ன செய்வது, எங்கு விழுந்தது என்று யோசித்துக்கொண்டிருக்கையிலேயே என் கணவர் குடுகுடுவென கப்பலிருந்து இறங்கி நாங்கள் முதலில் காத்துக்கொண்டிருந்த இடத்திற்கு ஓட, எனக்கோ கப்பல்கிளம்பிவிட்டால் என்ன செய்வது, விபூ, சத்யாவை தனியாக விட்டுபோகவும் மனம்வரவில்லை, இப்படி யோசித்துக்கொண்டிருக்கையிலேயே என் கணவர் தோளிலும், கைகளிலும் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு கப்பலில் ஏறுவதை பார்த்தபின்தான் அப்பாடா என்றிருந்தது :) ம்கூம், இத்தனைவருட அனுபவத்தில் இப்படி நடந்ததேயில்லை, ok, எல்லாம் ஒரு அனுபவந்தான் என்று எல்லாவற்றையும் டிக்கியில் வைத்துபூட்டிவிட்டு 2 முறை செக்செய்துவிட்டு :) தெம்பாக சூஸ் குடித்து டென்ஷனை குறைத்துவிட்டு, நிம்மதியாக கப்பலின்மேல் தளத்திற்குச்சென்று ஓரத்தில் சேர் எடுத்துப்போட்டு அமர்ந்தோம்.
கொஞ்சம் வறுத்த கடலையும் சாப்பிட்டு விட்டு எல்லோரும் நார்மல் நிலைமைக்கு திரும்பியபின், கப்பலின் மேல்தளத்தை சுற்றி சுற்றி, ரவுண்ட் கட்டி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று போட்டோ, வீடியோ எடுத்துத்தள்ளினோம் :) அவ்வப்போது கப்பலிருந்து அறிவித்த அந்தந்த இடங்களைப்பற்றிய குறிப்புக்களையும் கேட்டுக்கொண்டோம். கப்பல் பயணம் போகும் இரண்டரைமணிநேரத்தில், வழியில் 12 முக்கிய சைட்சியிங் (sight seeing) இடங்கள் உள்ளன. பசி எல்லோருக்கும் லெமன்ரைஸ் இருப்பதை ஞாபகப்படுத்தியது ;)
மணக்க மணக்க லெமன்ரைஸ்-ஐ சாப்பிட்டுவிட்டு, ஹாயாக அமர்ந்து மறுபடியும் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தோம்.
கொஞ்சநேரத்தில் இறங்குவதற்குண்டான அறிவிப்பு வந்தவுடன் அனைவரும் பார்க்கிங் நோக்கிச்சென்றோம். ஒருவழியாக lyseboten-லிருந்து Forsand வந்தடைந்தோம். கப்பலிருந்து காரை வெளியில் எடுத்தபின் நன்றாக டிக்கி பூட்டியுள்ளதா என்று செக்பண்ணிவிட்டு ;) நேவிகேஷனில் நாங்கள் தங்குவதற்கு புக்செய்திருந்த அட்ரஸை கொடுத்துவிட்டு கிளம்பினோம், அப்போது எங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் காத்திருப்பது தெரியவில்லை ;) ரோடு ஒருபக்கம்ஓங்கி உயர்ந்த மலை, மறுபக்கம் தண்ணீர் என்று பார்ப்பதற்கு ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது :) ஆகா, இந்த வழியாகத்தான் தினமும் போய் வரவேண்டும் என்று சந்தோசமாக பேசிக்கொண்டே சென்றோம், அரைமணிநேரத்திற்குமேல் சென்றுவிட்டோம், போகிறோம் போகிறோம் பாதையும் மலைமேல் ஏறி போய்க்கொண்டேயிருக்கிறது. சட்டென்று கார் மலைமீது ஒற்றையடிப்பாதையில் செங்குத்தாக ஏறிக்கொண்டிருக்கும்போது, என் கணவர் பிரேக் போட்டு, நேவிகேஷனில் அட்ரசை சரிபார்க்க, பின்கோட் (Pincode) தப்பாகயிருக்க, அதைசரிசெய்துவிட்டுபார்த்தால், கரெக்ட்டாக நேர் எதிர்திசையில் வந்துள்ளோம். என்ன செய்வது, வண்டியை திருப்ப வேண்டியதுதான் என்று அப்போதுதான் வெளியில் பார்த்தோம்.
சூப்பராக பள்ளத்தாக்கு மலை என்று இருந்தது, கேமரா இழுத்தது, இறங்கி, வந்ததற்கு ஞாபகமாக போட்டோ எடுத்துவிட்டு கிளம்பினோம் ;)
மெதுவாக அந்த ஒற்றையடி பாதையில் காரை வந்த வழியிலேயே திருப்பினோம்.
அரைமணிநேர பயணத்திற்குபின் கரெக்டாக நாங்கள் புக்செய்திருந்த இடத்தை இரண்டு
மலைகளுக்கு நடுவில் மலையை குடைந்து போட்டிருந்த பாலத்தைக்கடந்து, குகையைக் கடந்து, மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தடைந்தோம் :) அதன்பின் காரில் அந்த ஏரியாவை ஒரு குட்டி ரவுண்ட் அடித்து பார்த்து வந்தோம். அன்றைய சுவாரசியமான, ஆச்ரியமான விஷயங்களைப்பற்றி நினைத்துப்பார்த்தும், பேசிக்கொண்டும் சாப்பிட்டு முடித்து, அடுத்த நாள் செல்லவேண்டிய இடத்தைப்பற்றிய விபரத்தை பார்த்தோம். இரவு மணி 11:15ஆகிவிட்டது.எல்லோருக்கும் தூக்கம் கண்ணை சுழற்றியது. அனைவருக்கும் நன்றாக டயர்ட் ஆகிவிட்டது, படித்த உங்களுக்கும் கூட ;)
காத்திருங்கள் பயணம் தொடரும்.............. ;)

கல்லும் வச்சுட்டு வந்துட்டீங்க. எங்க வச்சீங்கன்னு இன்னொரு தரம் போய் மறக்காம பாரத்துடனும், சரியா? நல்லா படகு, கார் சவாரின்னு இன்டரஸ்டிங் ஆ இருக்கு, செல்வி.
ReplyDelete