வண்டி நகர்வதுபோல் தெரியவில்லை. குழந்தைகள் எல்லாம் பொறுமையிழந்து காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டன. வயதானவர்கள் வாக்கிங் போக தொடங்கினார்கள். கொண்டு சென்ற பிரட்டையும் சாப்பிட்டுமுடித்தோம். அவசர உதவி ஹெலிகாஃப்டர் மேலே பறந்து சென்றது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு பிறகு வண்டி மெதுவாக நகரத்தொடங்கியது.
வாக்கிங் போனவர்கள் குடுகுடுவென ஓடி வந்து வண்டியில் ஏறிக்கொண்டார்கள். விபத்துநடந்த இடத்தை நெருங்கியபின் தான் அவ்வளவு லேட்னாதின் அர்த்தம் புரிந்தது. ஓரு வண்டிதலைகீழாக கவிழ்ந்துகிடந்தது இன்னொன்று இடித்த வேகத்தில் கோபித்துக்கொண்டு யூ-டேன் அடித்துநின்றது :( வழியில் இன்னும் சில சிறிய விபத்துக்கள்...
பசிக்கத்தொடங்கியதால் கொண்டுசென்ற லெமன் ரைஸ், தேங்காய்சட்டினி என்று
வயிற்றுக்கொடுத்துவிட்டு பயணம் தொடங்கியது. ஆனாலும் ஃப்புல்
டிராஃப்பிக்கில் 20வருடத்தில் இப்போதுதான் மாட்டிக்கொண்டோம் :)
ஜெர்மனி-ஆஸ்திரியா பார்டர் நெருங்கியதை ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் நினைவுபடுத்தியது. பெட்ரோல் ஸ்டேஷ்னிலும் ஜே ஜே என கூட்டம் அலைமோதியது.
பெட்ரோல் புஃப்ல் செய்துவிட்டு, ஐஸ், ஐஸ் காஃப்பி குடித்துவிட்டு வீடு புக் செய்திருந்தவர்களுக்கு போன் செய்து லேட்டாவதை தெரிவித்தோம். அதனால் ஒன்றுமில்லை வரும்போது SMS கொடுங்கள் நாங்கள் வெயிட் பண்ணுகிறோம் என்று சொன்னார்கள். மீண்டும் பயணம் தொடங்கியது.
ஆஸ்திரியா-வில் ரோட் ஃப்பிரியாக இருந்ததால் வண்டி வேகம் தொடங்கியது. சட்டென்று ஃப்ளாஷ் அடித்து போட்டோவும் எடுத்தது ...ம்கூம் யாரும் கவனிக்கவில்லை ஸ்பீட் கண்ட்ரோலிருந்ததை :( பக்கத்தில் இன்னும் வேகமாக சென்றுகொண்டிருந்த வண்டியை எடுத்ததா இல்லை எங்களைத்தான் போட்டோ எடுத்ததா என்று லெட்டர் வந்தபின்தான் தெரியும் :(
வண்டியின் வேகத்தை குறைத்துக்கொண்டோம். ஆஸ்திரியா கடந்து ஸ்லோவேனியா நாட்டையும் கடந்தோம். எல்லோருக்கும் போர் அடிக்கத்தொடங்கிவிட்டது. விபூ, சத்யா தேர்ந்தெடுத்து வைத்திருந்த தமிழ்பட பாட்டையும் A to Z கேட்டாகிவிட்டது. மணி இரவு 10-த்தை நெருங்கிவிட்டது.
ஒருவழியாக குரோவேஷியா நாட்டின் பார்டர் வந்தடைந்தோம்.
எல்லோருக்கும் அப்பாட என்றிருந்தது. ஸ்லோவேனியா நாட்டிலிருந்து வெளியேருவதால் அங்கேயும் போலீஸ் செக்கிங் அதுமுடிந்தபின் குரோவேஷியா நாட்டின் பாஸ்போர்ட் செக்கிங் என்று முடித்துவிட்டு கிளப்பினோம்.
போலீஸ் செக்கிங் முடித்த சிறிது நேரத்தில் ரோட் டேக்ஸ் கட்டிமுடித்துவிட்டு கிளம்பினோம். அங்கேயே தெரிந்தது குரோவேஷியா மக்கள் இரக்க குணம் மற்றும் உதவி மனப்பான்மை உடையவர்கள் என்று. ஒருவழியாக மலை, கடல் என்று கடந்து வந்து சேர வேண்டிய ஊரையடைந்தோம், திரும்பவும் நெளிந்து நெளிந்து மலைமேல் ஏறிச்சென்ற பாதையில் ஏறி, ஸ்விஸ் நாட்டில் நாங்கள் எடுத்த ஹாலிடே வீட்டிற்கு சென்ற பாதையை நினைவுபடுத்தியதை பேசிக்கொண்டே வீட்டை அடைந்தபோது மணி இரவு பதினொன்றைத்தொட்டது. எங்கள் காரை பார்த்தவுடன் வீட்டின் ஓனர் ஓடிவந்தார். அவருடைய மாமனாருக்கும், மனைவிக்கும் ஜெர்மன் பேசத்தெரிந்திருந்தது. அவ்வளவு லேட்-ஆனாதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல், வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றுமில்லையே என்று விசாரித்தார்கள் :))) நல்ல மனிதர்கள் . சிறிதுநேரம் பேசிவிட்டு, வீட்டை காண்பித்துவிட்டு நாங்கள் மூன்றாம்மாடியில் தான் குடியிருக்கிறோம் என்ன உதவிவேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்கள். நாங்கள் எடுத்திருந்த வீடு ground floor, வெளியில் சென்று பார்த்தபின் வந்த களைப்பு அனைத்தும் மறந்து போட்டோ சூட்டிங் தொடங்கிவிட்டது :)))
வீட்டின் கார்டனிலிருந்து கொள்ளையழகுடன் நகரம் இரவில் மின்விளக்கில் ஒளிர்ந்துகொண்டிருந்ததை அரைமணிநேரம் ரசித்தபின்தான் அனைவருக்கும் இரவுச்சாப்பாடு நினைவுக்கு வந்தது :) அதிகாலை 1மணிக்குமேல் இரவுச்சாப்பாட்டை முடித்துவிட்டு நிம்மதியாக தூங்கச்சென்றோம் :)
kalakkal..Have fun...
ReplyDeleteArumai Akka..Tamilai padikka nalla irukku..with pics :)
ReplyDeleteஅருமையான பதிவு, செல்வி. ஆல்ப்ஸ் பார்த்தவுடன் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!!! ரோட்டில ப்ளாஷ் அடிச்சப்ப நல்லா போஸ் கொடுத்தீங்களா ??? எங்கள அடிக்கடி உங்க ஊருல இப்படித்தான் படம் எடுத்தாங்க :)
ReplyDelete