மீண்டும் ferry-ல் Fjord- ஐ கடந்துசெல்லவேண்டும். இதுதான் நார்வேயில் உள்ள மிகப்பெரிய குறை :( பயணத்திலேயே நம்முடைய நிறைய நேரம் வீணாகிவிடுகிறது. கப்பலுக்கு காத்திருந்து கரையைக்கடந்து அடுத்தபக்கம் வந்து வேகமாக செல்லலாம் என்றால், சான்ஸ்ஸே இல்லை :(
போகும்பாதைகள் அவ்வளவு கொள்ளை அழகுடன் காட்சியளித்தது :)))
மலை, மலையை ஒட்டிய பாதை, அதையொட்டி நதி என்று இயற்கையழகு என் அழகைப்பார் என்றது.
எங்களாலும் அந்த அழைப்பை மறுக்கமுடியவில்லை :) நிமிடத்திற்கொரு முறை நிறுத்தி போட்டோ எடுத்துக் கொண்டோம்.
போகும்வழியில் இண்டர்நெட்டில் படித்தது போலவே ஏகப்பட்ட நீர்வீழ்ச்சிகள் !!!
இங்கிருந்து நேராக இண்டியாவிற்கு pipeline connection போட்டால், நம்மூரில் தண்ணீர் கஷ்டம் என்ற வார்த்தையே இல்லாமல் போய்விடுமே என்ற எண்ணம்தான் தோன்றியது ;) idea superla :)
எங்குபார்த்தாலும் தண்ணீர், இந்தப்பக்கம் பார்த்தால் பச்சைப்போர்வை போர்த்திய மலைகள், வெள்ளை ஆடை அணிந்த நீர்வீழ்ச்சிகள்... அந்தப்பக்கம் பார்த்தால் நீலச்சேலை கட்டிய நதி என்று காரில் போகும்போது எந்தப்பக்கம் பார்ப்பது என்றிருந்தது.
வேறுவழி, காரை ஓரங்கட்டினோம். சுற்றி, சுற்றி 360 டிகிரி சுற்றி போட்டோ எடுத்தபின் தான் கார் இடத்தைவிட்டு நகர்ந்தது :)
வரும்வழியெல்லாம் மழை
பெய்து கொண்டே இருந்ததால் அதுவரை நீர்வீழ்ச்சியில்கூட இறங்க மறுத்த விபூவும் இறங்கி viboos typical: panaroma photos எடுக்க ஆரம்பித்துவிட்டாள் :)
அதன்பின் பாதை மிகவும் குறுகலானது, ஒருநொடி பாதைமாறி வந்துவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. ஒருகார் மட்டுமே போகக்கூடிய மிகச்சிறிய பாதை.
அச்சோ, இதில் எதிர்த்தார்போல் கார் வந்தால் எப்படி வழிவிடுவது என்று நினைத்து முடிக்கும் முன்பே எதிரில் கார் வந்து நிற்கிறது :( எல்லாம் நம்ம நேரம் என்ன செய்வது, இந்தமாதிரி ஏதாவது குண்டக்க மண்டக்க என்று நினைத்தால் உடனே நடந்துவிடுகிறது :( பேசாமல் கண்ணைமூடிக்கொண்டேன், என் கணவர்தான் விடாக்கொண்டன் ஆச்சே, லாவகமாக எதிர் வண்டிக்கு இடம்விட்டு எங்கள் காரையும் எடுத்தார். இந்த ஒற்றையடிப்பாதையில் இன்னும் அரைமணிநேரம் எப்படிப்போகப் போகிறோம், எல்லா சாமிகளையும், எதிரில் கார் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன் :)
பார்க்கிங் ஏரியா வந்தவுடன், கஷ்டப்பட்டு கடந்துவந்த பாதையெல்லாம் மறந்துவிட்டது.
சரி, மலையடிவாரத்திலேயே நின்றால் எப்படி, ஏற்கனவே நின்று, நின்று வந்ததால் நேரமாகிவிட்டது.
நடக்க ஆரம்பித்தோம்.
மறக்காமல் எல்லோரையும்போல் நாங்களும் கல்லை அடுக்கிவிட்டு கிளம்பினோம்.
சிகப்பு குறியை தொடர ஆரம்பித்தோம். ஒருபக்கம் மலை, மறுபக்கம் பனி உறைந்து, சலசலவென்றில்லாமல் பெறுத்தசத்தத்துடன் ஆரவாரித்துச்சென்று கொண்டிருந்த காட்டாறு என்று பக்கபலத்துணையுடன் நடந்தோம்.
நாங்கள் போகிற ஸ்பீடைப்பார்த்தால் மலையேறுவதன் சாத்தியம் குறைவாக தோன்றியது, யோசித்துக்கொண்டிருக்கையில் ஜெர்மன்பேச்சு கேட்டது, ஒரு குடும்பம் இறங்கிவந்துகொண்டிருந்தார்கள். ஆகா ஆள் கிடைத்துவிட்டார்கள், அவர்களிடம் வழியைப்பற்றிக்கேட்டுவிடலாம் என்று, குடும்பத்தலைவர் அப்பாவிடம் சென்று, நான்: "குட்டன் டாக்"(Guten Tag/Hallo/Hi) என்று ஜெர்மனில் கேட்க ஆரம்பித்தவுடன், பெரிய ஷாக் அவர் முகத்தில் ஒரு நிமிடம் அவர் பேசவேயில்லை, மறுபடியும் நான் கேட்டபின் என்னை அதிசயமாக பார்த்தார். அந்த அத்வானகாட்டில் இந்தியப்பெண் ஜெர்மன் பேசுவதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றார் :)))) மழையின் காரணமாக பாதை போகப்போக வழுக்கலாகவும், ஏறுவதற்கு சிரமமாகயிருந்ததால் பாதியிலேயே திரும்பிவிட்டதாக கூறினார் :(((
மதியம் 4 மணியாகிவிட்டது. ஓகே, இதற்குமேல் நாம்சென்று பயனில்லை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கேற்ப ஏறினவரை போதும் என்று அங்கிருந்தே மலையையும், பனிப்பாறையையும் என்ஜாய் பண்ணினோம்.
கீழிறங்கி வந்தால், அந்திசாயும் வேளையில் மஞ்சள்பூக்களின் அழகு சூரியஒளியில் மேலும்அழகுமெறுகேறி மின்னிக்கொண்டிருந்தது :))) எப்படி போட்டோ எடுக்காமல் இருக்கமுடியும், உடனே செயல்படுத்தினோம்.
ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான் :))))
போதும்போதுமென ரசித்துவிட்டு, மலைக்கும், பனிப்பாறைகளுக்கும் பிரியாவிடை கொடுத்துவிட்டு, இரட்டையர்கள் நீர்வீழ்ச்சி பார்க்க கிளம்பினோம்.
நம்மூர் கொடைகானல் போலிருந்தது. பக்கத்திலேயே டீக்கடை, அந்த மழைக்கு இதமாக காஃபி, டீ குடித்துவிட்டு, அருவியையும் ரசித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.
ஏற்கனவே அப்பாவும், மகனும் வரும்போதே கப்பலில் பெல்ஜியத்திலிருந்து டூரிஸ்ட்டாக வந்திருந்த இளைஞரிடம் பேச்சுக்கொடுத்தபோது கிடைத்த தகவலின்படி, திரும்பிப்போகும்போது, வந்த வழியிலேயே செல்லாமல், (panaroma view) இயற்கை எழில்கொஞ்சும் ரூட்டில் செல்ல முடிவுசெய்திருந்தனர்.
ரூட்டை மாற்றியது வீணாகவில்லை, ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது.
நிறைவான மனதோடு, வீட்டை வந்தடைந்தோம் :))))
சாப்பிட்டுவிட்டு எப்போதும்போல் அடுத்தநாள் போவதற்கு ஃப்ளான் செய்துவிட்டு நாளைய பயணம் நீண்டதூரம் என்பதால் தூங்கச்சென்றோம்.
ஆனால் அந்தப்பயணம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவை எங்களுக்கு ஏற்படுத்தப்போகிறது என்பது யாருக்குமே அப்போது தெரியவில்லை !!!!! ?????
ஆவலுடன் காத்திருங்கள்,
விரைவில் தொடரும்..... :)
No comments:
Post a Comment